அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விவேகம்’.

இது வரும் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் ஒவ்வொன்றாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷிபடுத்திய படக்குழு, பின்னர் அனைத்து பாடல்களையும் வெளியிட்டது.

தற்போது இதன் டிரைலர் வெளியிட்டு ரசிகர்களை சும்மா றெக்க கட்டி பறக்கவிட்டுள்ளது

ஹாலிவுட் ரேஞ்சுக்கு அஜித், “நான் யாருன்னு எப்போதும் நான் முடிவு பண்ணுறதில்லை, எதிரில இருக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்கன்னு” சொல்லும் வசனம் டிரைலரை அதகளப்படுத்தியுள்ளது.