Asianet News TamilAsianet News Tamil

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; தப்பா பேசாதீங்க - பாலியல் குற்றச்சாட்டுக்கு மோகன்லால் விளக்கம்

மலையாள திரையுலகில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து நடிகர் மோகன் லால் விளக்கம் அளித்துள்ளார்.

Only Here To Set Things Right Actor Mohanlal On Kerala MeToo Allegations vel
Author
First Published Aug 31, 2024, 4:28 PM IST | Last Updated Aug 31, 2024, 4:31 PM IST

கடந்த 2017ம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகை பாலியல் ரீதியாக துன்புறுப்பட்ட வழக்கில் கேரளா அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அப்போது மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் விலகினார்.

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் மோகன்லாலின் சொத்துகள்!

தொடர்ந்து அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளி வந்த நிலையில், இது தொடர்பாக மோகன்லால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அவர் கூறுகையில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை இங்கு தான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன். மலையாள திரையுலகில் மொத்தமாக 21 சங்கங்கள் உள்ள நிலையில், அம்மா சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? அம்மா சங்கம் தொடர்பாக அவதூறு பரப்பாதீர்கள்.

கேரவனில் கேமரா; எல்லா நடிகைகளுடைய டிரஸ் மாத்துற வீடியோ வச்சிருக்காங்க - ராதிகா சொன்ன பகீர் சம்பவம்

பாலியல் புகார் தொடர்பாக அரசும், நீதிமன்றமும் தங்கள் கடமையை செய்கின்றன. பாலியல் புகாரால் சினிமா துறையில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடது. அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஒட்டுமொத்த கேரளா திரை உலகமும் பதில் சொல்லும். வயநாடு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது மக்களுக்காக அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. ஒரே பிரச்சினையை மீண்டும் மீண்டும பேசவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios