cinema
தயாரிப்பாளர், நடிகர், பின்னணி பாடகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட மோகன்லால் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்திய அரசு மோகன்லாலுக்கு 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது.
2024ஆம் ஆண்டு தரவுகளின்படி, மோகன்லாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.376 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மோகன்லால் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவர். ஒரு படத்திற்கு ரூ.8-17 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார்.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் மோகன்லாலுக்கு குடியிருப்பு சொந்தமாக உள்ளது. தவிர, விலை உயர்ந்த வாட்ச்களும் கார்களும் வைத்திருக்கிறார்.
மலையாளத்தில் ஒரு ரியாலிட்டி கேம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ.18 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.17 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
மோகன்லாலிடம் ஆடம்பர பொருட்கள் பல உள்ளன. குறிப்பாக, பல சொகுசு கார்கள் வைத்திருப்பதை சினிமா உலகத்தினர் அறிவார்கள்.
மோகன்லால் கடந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவரை வாங்கினார். ரூ.90 லட்சம் மதிப்புள்ள ஒரு வெல்ஃபైர் மற்றும் ரூ.1.36 கோடி மதிப்புள்ள லேண்ட் குரூஸர் ஆகியவையும் அவரிடம் உள்ளன.