சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு, தமிழகத்தில் அதிக நபர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இதில் பணத்தை இழந்து, சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களுக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கூறி, தொடரப்பட்ட வழக்கை இன்று விராசனை செய்த உயர்நீதி மன்ற மதுரைக்கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அந்த விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே போல் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தமன்னா, சுதீப் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

"ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறதுதெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்கு செல்கிறது, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.