சொற்களால் குதூகல ஆட்டம் போட வைத்த கண்ணதாசன்... மெட்டுப்போட்டு தேடி வர வைத்த எம்.எஸ்.வி..!
ஓர் ஆதரவற்ற இளம்பெண். தன் உறவைத் தேடி வருகிறாள். அங்கே புதிதாய் ஓர் உறவு கிடைத்து விடுகிறது. உண்மையில் அது, ஒரு பொய் சொல்லி வந்த உறவு.
திரைப் பாடல் - அழகும் ஆழமும்-4 உறவு தேடி வந்தவள்.
ஓர் ஆதரவற்ற இளம்பெண். தன் உறவைத் தேடி வருகிறாள். அங்கே புதிதாய் ஓர் உறவு கிடைத்து விடுகிறது. உண்மையில் அது, ஒரு பொய் சொல்லி வந்த உறவு. சிறிது நாட்களில், புதிய உறவு, புதிய வாழ்வைத் தந்து விட்டதாய் உறுதியாய் நம்புகிறாள். தான் எண்ணி வந்தபடி, எல்லாமே வெற்றிகரமாக நிறைவேறி விட்டதாய், மனம் மகிழ்கிறாள். ஆனந்தமாய்ப் பாடி ஆடுகிறாள்.
ஊட்டி வரை உறவு. ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், பாலையா நடிப்பில், 1967இல் வெளியான படம். காதல், நகைச்சுவை, இசைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவாஜி கனேசனின் அழகான தோற்றம், யாரையும் வசீகரிக்கும்.
தனது பொய் 'வேலை செய்கிறது' என்கிற மகிழ்ச்சியில் கேஆர்விஜயா. புன்னகையுடன் நளினமாய் பாடி ஆட...இவர் சொன்னது பொய் என்பதை அறிந்து கொண்ட நாயகன் சிவாஜி கணேசன், கையில் சிகரெட்டுடன் படு 'ஸ்டைல்'ஆக ரசித்து நடக்க... மனதை வீட்டு நீங்காத ரம்மியமான காட்சி.
பொய்யால் கிடைத்த பொய்யான வெற்றி - நிலைக்கும் என்று நம்பி, ஆடுகிறாள் நாயகி. தன் வயதுக்கே உரிய இளமைத் துள்ளலுடன் அவள் பாடி ஆடுவதற்கு ஏற்ப, வார்த்தைகள் குதித்து வர வேண்டும். கவிஞர் கண்ணதாசனுக்கு, இது கைவந்த கலை ஆயிற்றே..! சொற்களில் குதூகலமாய் ஆட்டம் போடுகிறார்.
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். பின்னணி: பி.எஸ்.சுசீலா. இதோ அந்தப் பாடல்:
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது.
என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி.
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி.
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...?
இனி கலக்கம் என்றும் இல்லை
இனி விளக்கம் சொல்வதும் இல்லை.
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ..?
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படியுங்கள்:-
அத்தியாயம்-3:-ஊமை பெண்ணின் கனவு... கவிதையாய் மொழி பெயர்த்த கண்ணதாசன்..!