ஜமுனா

.இந்த நிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனா இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மிஸ்ஸியம்மா

நடிகை ஜமுனா சாவித்திரியுடன் இணைந்து பல படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார்.இதில் மிஸ்ஸியம்மா முக்கிய படமாகும்.

நடிகை ஜமுனா கீர்த்திசுரேஷ் பற்றி கூறியதாவது.

வருத்தம்

நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.நடிகை சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிருடன் உள்ளேன்.சாவித்ரியை பற்றி எனக்கு நிறைய தெரியும்.அப்படி இருக்கும் போது படம் எடுப்பவர்கள் என்னிடம் எதுவும் கேட்காதது வருத்தமாக உள்ளது.

அரைகுறை

சாவித்ரியாக நடித்துள்ள பெண்ணுக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு தெரியாத ஒரு பெண் எப்படி சாவித்ரியின் கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியும்.தற்போதைய நடிகைகள் அரைகுறை ஆடையில் நடிக்கிறார்கள்.எங்கள் காலத்தில் அதெல்லாம் கிடையாது.

ஜெமினி கணேசன்

எனக்கு மகன் பிறந்த போது கூட தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு சாவித்திரி வந்தார்.நல்ல கணவர் அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.ஜெமினி கணேசன் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.

திருமணம்

ஜெமினி வேண்டாம் என்று கூறியும் நீதானே அவரை திருமணம் செய்து கொண்டாய் என்று ஆறுதல் கூறினேன். சாவித்ரியை போன்று சினிமாவில் யாரும் சம்பாதித்தது இல்லை.அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார்.மைசூரில் சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார். 

மது

இவ்வளவு சொத்துக்கு அதிபதியான சாவித்திரி இறுதியில் வாழ்க்கை வெறுத்து மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து கோமாவில் இறந்து விட்டார் என்றார் ஜமுனா.