Old actress B.V.Radha death
பழம் பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகையான, பெங்களூர் விஜய ராதா என்பவர் B.V. ராதா. 69 வயதாகும் இவர் இன்று பெங்களூரின் உள்ளதா அவருடைய இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான B.V. ராதா இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
1964-ல் 'நவகோடி நாராயணா' என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300 க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இறுதி நாட்களில் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ". என அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளனர்.
