Chinmayi : குழந்தையை வைரமுத்துவோடு ஒப்பிட்டு பேசிய நெட்டிசனுக்கு சின்மயி கொடுத்த செருப்படி பதில்
Chinmayi : 30 வயதுக்கு மேல் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் என பாடகி சின்மயியை நெட்டிசன் ஒருவர் பாரட்டி இருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்த சின்மயி, கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இவர் கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதைக் கேட்டு கோலிவுட்டே ஆடிப்போனது. இன்றளவும் வைரமுத்துவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார் சின்மயி.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார் சின்மயி. மீடூ புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது. பெண்களை இழிவாக பேசும் பிரபலங்களுக்கு பதிலடி கொடுப்பது என சோசியல் மீடியாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இதனிடையே கடந்த ஜூன் 21-ந் தேதி பாடகி சின்மயிக்கு குழந்தை பிறந்தது. அதுவும் இரட்டைக் குழந்தை. கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிடாமல் வைத்திருந்த சின்மயி திடீரென தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்ததை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன்படி நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்த வாழ்த்து பதிவில் 30 வயதுக்கு மேல் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் என பாரட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி, நிச்சயம் 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ அப்போது பெற்றுக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இவ்வாறு பாரட்டுக்கள் குவிந்து வந்தபோதிலும் சிலர் அத்துமீறிய கமெண்ட்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் “வைரம் மற்றும் முத்து சொன்னது அக்கா வைரமுத்துனு நினைச்சிட்டாங்க போல, எப்ப பாரு அதே நெனப்பு” என பதிவிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த சின்மயி, “அவர போலவே உங்க வீட்ல பிள்ளைகள் பிறக்கட்டும். அவர் நினைப்பாவே இருக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என செருப்படி பதில் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... வாடகைத் தாய் மூலம் குழந்தையா?... துருவி துருவி கேட்ட நெட்டிசன்ஸ்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சின்மயி