'போடா போடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பெரிதாக பட வாய்புகள் அமையவில்லை. 

பின் இயக்குனர் பாலா இயக்கிய தாரதப்பட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த இவர்... தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வெளியான 'விக்ரம் வேதா', 'சத்யா' ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நூதன திருட்டு:

இந்நிலையில் இவருடைய அம்மா சாயாவிடம் நூதன முறையில் ஒரு வாலிபர் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டுள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்சியாக்கியுள்ளது.

நடிகை வரலட்சுமி அவருடைய அம்மா சாயாவுடன் தற்போது கோட்டூர்புரத்தில் இருக்கும் இவர்களுக்கு சொந்தமான  வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் சாயவை பிரவீன் என்பவர் போன் மூலம் தொடர்புக்கொண்டு கிரெடிட் கார்டு என கூறி வங்கி கணக்கு விவரங்களை ஏமாற்றி வாங்கியுள்ளார். பின் சாயாவிற்கு தெரியாமல் வங்கிகணக்கில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த சாயா உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.