பழம்பெரும் காமெடி நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பேத்தியும், பிரபல பின்னணி பாடகியுமான எஸ்.எஸ்.கே.ரம்யா சீரியல் நடிகர் சத்யா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

என்.எஸ்.கே ரம்யா, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, 'பந்தயம்' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50 திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி புகழ்பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரால், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக விரைவிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே திருமணமான என்.எஸ்.கே ரம்யா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து தற்போது, இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'நீல குயில்' தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

இவரின் திருமண புகைப்படங்கள் இப்போது, வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.