Now the release of the release of the bachelor-2 last years release

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த “தங்கல்” இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது. இச்சாதனையை பாகுபலி-2 முறியடித்து ரூ1450 கோடியை வசூல் வேட்டையாடியது.

ஆனால், தற்போது தங்கல் சீனாவில் ரிலிஸாகி வசூலில் சாதனை செய்துள்ளது. அதாவது நேற்றுடன் தங்கல் சீனாவில் ரூ509 கோடியை வசூல் செய்துள்ளது. 

இதன் மூலம் மொத்த வசூலில் தங்கல் ரூ.1275 கோடியை எட்டியுள்ளது,

இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் மட்டுமே தங்கல் 100 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி-2 வசூல் மெல்ல குறைந்து வர இன்னும் சில தினங்களில் தங்கல் அதை முறியடித்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.