வெள்ளித்திரையில் இருந்து ஓய்வெடுத்து சின்னத்திரையிலும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும், ட்விட்டரில் பிஸியாகவும் இருந்து வருகிறார்.  சுந்தர்.சி.-குஷ்பு தம்பதிக்கு அவந்திகா - அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தீபாவளியை ஒட்டி ’மிஸ்யூ அவந்திகா’ தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் குஷ்பு.

 

அதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் குஷ்புவின் மகள் உருவம் குறித்து கிண்டலடித்து இருந்தார். இதனால் கோபம் உச்சிக்கு ஏறிய குஷ் அந்த நபரை, பன்னி முதல்ல உன் மூஞ்சிய கண்ணாடில பாரு... நாய் கூட பார்க்காது வாந்தி எடுத்துட்டு போயிடும் ப்ளட்டி’என குமுறி இருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவந்திகா, ‘’எனது அனுமதி இல்லாமலேயே பலரும் போட்டோ எடுக்க முயற்சிக்கிறார்கள். எனது விடுப்பமின்றி வரம்பு மீறி போட்டோ எடுப்பவர்கள் மீது கோபம் வருகிறது. அடுத்து சமூக வலைதளங்களில் ஷாட் செய்யும் தெரியாத நபர்கள் எங்கள் உருவத்தை பற்றி ஏன் குண்டாக இருக்கிறீர்கள் என கேலி செய்வார்கள்.

 

அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் செய்து விடுவேன். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியுமா? அதனால் அவற்றை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை’’எனக் கூறியுள்ளார்.