நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக, நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை  தவிர்த்து வந்தார். குறிப்பாக படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போதே... புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடமும் கூறி வந்தார்.

ஆனால் இனி  புரொமோஷனுக்கு வரமாட்டேன் என அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கிய பின்னரே, படங்களில் நடிக்க ஒப்புகொள்ளபோவதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.

சமீபத்தில், நடிகை திரிஷா 'பரமபதம்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததை கண்டிக்கும் வகையில், பிரபல தயாரிப்பாளர் டி.சிவா, அவருடைய பாதி சம்பளத்தை தர வேண்டும் என காரம் சாரமாக பேசியது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனை வரும் முன்னரே நயன்தாரா அலர்ட் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இது கோடம்பாக்கத்தை சுற்றி வரும் கட்டு கதையா?  என்பது அவரே வாய் திறந்து சொன்னால் தான் தெரியவரும், அது வரை காத்திருப்போம்.