Nobody can make such request to Tala Ajith except Mansoor Ali Khan

“தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்” என்று நடிகர் அஜித்துக்கு, மன்சூர் அலிகான் எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசியல் சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் தைரியமாக வெளிப்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

தற்போது அஜித்தின் விவேகம் படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், மன்சூர் அலிகான், நடிகர் அஜித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ’தம்பி அஜித்துக்கு! மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள்.

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.

படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக்கூடாதா?

உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்” என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.