தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார்.  அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார்.

அதே நேரத்தில் காயத்ரி  பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.
அண்மையில்  அவருக்கும் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை  சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.

ஆனால் இன்று அதிரடியாய் பல்டி அடித்த காயத்ரி, அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பாஜகவிலிருந்து விலகவில்லை எனன்று தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.