இந்த தேசத்தினை காக்க வந்த தேவர்கள் போல் சினிமா ஹீரோக்களை தூக்கி வைத்து கொண்டாடுவதுதான் கடந்த இரண்டு, மூன்று தலைமுறைகளாக ரசிகர்கள் செய்யும் நாசம். ஆனால் அதே சினிமா துறையில் இருந்து கொண்டு, மாஸ் ஹீரோக்களின் இமேஜ் மீது மண் அள்ளிப் போடும் செயல்களையும் சில முக்கியஸ்தர்கள் செய்ய தவறுவதில்லை. அவர்களில் ஒருவர்தான் தயாரிப்பாளர் கே.ராஜன். 

ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களை தாறுமாறாக தாளித்து எடுத்திருக்கிறார் மனிதர். தயாரிப்பாளர்களின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது எனும் தொனியில் இவர் பேசியிருக்கும் வார்த்தைகள் சூப்பர் ஹீரோக்களை கண்டபடி சூடேற்ற் இருக்கின்றன. 
தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு...”என்ன பண்ணுறது எல்லா மாஸ் ஹீரோக்களும் ஏழைகளாக பார்த்துத்தான் தன் படத்தை தயாரிக்க வாய்ப்பு தருகிறார். ரஜினி லிஸ்டில் பரம ஏழை தயாரிப்பாளர்கள் பத்து பேர் அடங்கிய லிஸ்ட் இருக்கிறது. அவர்களுக்குதான் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார். 

அஜித்தும் அப்படித்தான் ஏழை தயாரிப்பாளருக்குதான் வாய்ப்பு தருகிறார். ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் எனும் பரம ஏழையின் தயாரிப்பில்தான் தொடர்ந்து நடிக்கிறார். விஜய்யும்  இப்படித்தான். கோடிக்கோடியாய் சம்பாதித்து வைத்துள்ளவர்களை மேலும் மேலும் கோடீஸ்வரர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஹீரோக்கள். இதில் இவர்களுக்கு அரசியல் ஆசை வேறு. எல்லோருக்கும் எம்.ஜி.ஆர். என்று நினைப்பு. 

ஆனால் எம்.ஜி.ஆரின் நிழலைக் கூட இவர்களால் தொட முடியாது. பத்துப் படம் நீ நடிச்சுட்டா நீ என்ன எம்.ஜி.ஆரா? அந்த மனுஷன் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தபோது அதில் முப்பது ஆயிரத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். ஆனால் இவர்களோ ஏழை தயாரிப்பாளர்களுக்கு கூட கைகொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை பத்து முறை கூட பார்த்தார்கள் மக்கள். ஆனால் இவர்கள் (ரஜினி, கமல்) படங்களை இரண்டாவது முறை பார்க்கவும் கூட ஆள் கிடையாது.” என்று வெளுத்திருக்கிறார். இதன் ரியாக்‌ஷனை கவனிப்போம்!