தமிழ் திரையுலகை சேர்ந்த, பிரபலம் ஒருவர்... பெண் தேடி பெண் தேடி வெறுத்து விட்டதால் என்னவோ இனி திருமணமே வேண்டாம் என்கிற முடிவை எடுத்துள்ளார்.

திரையுலகை பொறுத்தவரை குறிப்பிட்ட திருமண வயதை பிரபலங்கள் கடந்து விட்டாலே... அவர்களை எப்போது உங்களுக்கு திருமணம் என்கிற கேள்வியும் துரத்த துவங்கிவிடும். இந்த விதி நடிகைகளுக்கு மட்டும் அல்ல நடிகர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆர்யா, விஷாலை அடுத்து இந்த பிரபலத்தின் திருமண தகவலை தான் பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர் வேறு யாரும் இல்லை, 'சென்னை 28 ' , 'மாஸ் என்கிற மாசிலாமணி', போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரேம் ஜி தான். பிரபல இசை குடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபிக்கும் விதத்தில் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். 

வெங்கட் பிரபுவின் செல்ல தம்பியும், வீட்டில் கடைக்குட்டி பிள்ளையுமான இவருக்கு காதல் ஒர்க் அவுட் ஆகாததால், பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க பல வருடங்களாக பெண் தேதி வந்தார்கள். கடைசியில் இவருக்கு தாடியும் மீசையும் நரைத்து போனதே தவிர, இவர் எதிர்பார்த்தது போல் பெண் கிடைக்கவில்லை. 

இதனால் தான் என்னவே... இனி திருமணம் செய்து என்ன செய்ய போகிறேன், பேசாம திருமணமே செஞ்சிக்காம கட்ட பிரம்மச்சாரியா இருந்திடலாமுன்னு முடிவு செஞ்சிருக்கேன் என பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.