மீண்டும் நடிப்பு இசை என்று பிசியாகிவிட்ட பிக்பாஸ் கமலின் குட்டி பாஸ் நடிகை ஸ்ருதி ஹாசன்  தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்னணிபாடகி, இசையமைப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதல் சமீபத்தில் புட்டுக்கிட்ட சங்கதியும் ஊர் உலகம் அறிந்ததே.

இடையில் நடிப்பை மறந்து வெளிநாடுகளுக்கு இசை ஆராய்ச்சி என்ற பெயரில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்ருதி மீண்டும் நடிக்கவந்துவிட்டார். அந்த வகையில் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர் மற்றும் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார். ’லாபம்’படப்பிடிப்புக்கு நடுவே அடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் ஸ்ருதியிடம் 'உங்கள் திருமணம் எப்போது? திருமணத்தின் போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்வோம்' என்று கூறியிருந்தார்.இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாஸன், 'என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்' என்று  படு ஸ்போர்டிவாக பதிலளித்துள்ளார்.