பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு 'மேயாத மான்' படத்தின் மூலம் சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் பிரியா அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுத்தார்.

மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்துள்ள பிரியா பவானி, தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேலை செய்யசொல்லுவது பிடிக்காது ஆனால் அங்கு நடக்கும் சண்டைகள் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என கூறியதோடு ஜூலி மற்றும் ஆர்த்தி உள்ளே சென்றும் சண்டைகள் நடைபெறாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.