'ராஜா ராணி' , 'தெறி' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அட்லீ, தற்போது நடிகர் விஜயை வைத்து அவருடைய '61 வது படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.

அதே நேரத்தில், தான் தயாரித்து வரும் 'சங்கிலி புங்கிலி கதவை திற' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே பிரபல நடிகர் நிவின் பாலியிடம் அவரை வைத்து இயக்க கால் ஷீட் வாங்கி வைத்திருந்தாராம் அட்லீ. ஆனால் விஜய்யை வைத்து இயக்கம் படம், தயாரிப்பு என இருந்ததால் நிவின் பாலியை மறந்ததே விட்டாராம்.

தற்போது நிவின் பாலி அடுத்தடுத்து, புது திரைப்படத்தில் கமிட் ஆகி வருவதால் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கால் ஷீட் பற்றி பேச ஆட்களை வைத்து தூது அனுப்பி வருகிறாராம் அட்லீ.

ஆனால் நிவின் பாலி அவர்களை பார்க்க வேண்டாம் என தவிர்த்து வருகிறாராம், மேலும் அட்லீ போன் செய்தாலும் அதை கண்டு கொள்ளவே மாட்டேங்கிறார் என படப்பிடிப்பு தலத்தில் அட்லீ புலம்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.