பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராஜேஸ்வரி', 'மை டியர் பூதம்', 'சிவமயம்', 'அரசி' ஆகிய தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,  தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிவேதா தாமஸ். 

இவர் தமிழில் தளபதி விஜய் நடித்த 'குருவி' மற்றும் ஜில்லா ஆகிய படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் கதாநாயகியாக அறிமுகமான, 'போராளி', ,'நவீன சரஸ்வதி சபதம்' ஆகிய படங்கள் சுமாரான வெற்றி பெற்றாலும், தொடர்ந்து இவருக்கு தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது. தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது, ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ.... டான்ஸ் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் இவர் தற்போது கார் ஓட்டி கொண்டே... "சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங், நடிப்பில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் இடம்பெற்ற ஒரு ராப் பாடலை கார் ஓட்டிய படியே பாடியுள்ளார். இதை பார்த்து நிவேதா உங்களுக்கு இப்படி திறமை உள்ளதா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ: 

"