குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம், சீரியலில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இதை தொடந்து, நடிகர் ஜெயிக்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும்,  பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். மேலும் தமிழில் இதே போன்ற குணச்சித்திர வேடங்கள் மட்டுமே கிடைத்ததால், தமிழில் வரும் வாய்ப்புகளை தவிர்த்து விட்டு தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார்.

தெலுங்கில், ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா,  போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் நடித்த படங்கள் வெற்றிபெற்றதால் தற்போது முன்னணி நடிகையாக தெலுங்கு திரையுலகில் வளம் வருகிறார்.

இதுவரை சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று தன்னுடைய படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவர்,  தற்போது சென்னைக்கு குட் பை சொல்லிவிட்டு ஹைதராபாத்திலேயே நிரந்தரமாக குடியேற வீடு பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.