Nivetha Pethuraj Wants Pothole Mode in Google Map : கூகுள் மேப்பில் குண்டும் குழியுமான அல்லது பள்ளம் மேடான சாலையை முன்கூட்டியே மதிப்பிடும் Pothole Mode என்ற பயன்பாடு இருக்க வேண்டும் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளிம் பட்டியலில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜிற்கு டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல், போ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பெரிதாக எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. தமிழ் தான் கை கொடுக்கவில்லை என்று தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. எனினும், கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில படங்களில் நடித்து தன்னை ஆக்டிவாக வைத்து வருகிறார்.
சினிமாவில் மட்டும் தான் நிவேதா பெத்துராஜிற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அவர் சிறந்த கார் ரேஸர். கார் என்றால் ரொம்பவே பிடிக்கும். நன்கு கார் ஓட்ட தெரிந்த நிவேதா பெத்துராஜ் தல அஜித் போல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். இவரிடம் எந்த நடிகையும் இல்லாத சொகுசான, பவர் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக வலிமை மிக்க கார் என்று சொல்லப்படும் டாட்ஜ் சேலஞ்சர் கார் வைத்திருக்கிறார். இந்த காரின் மதிப்பு ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கார் ரேஸர் என்றால் எல்லா கார்களையும் பிடிக்கும் அல்லவா. அப்படித்தான் நிவேதா பெத்துராஜிற்கும். அவருக்கு கார் என்றாலே ரொம்பவே பிடிக்கும். அதே போன்று சமூக அக்கறையும் கொண்டவர். இதனை நிரூபிக்கும் வகையில் இப்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூகுள் மேப்பில் இந்த முறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகில் கூகுள் மேப் பயன்படுத்தாவர்கள் எவரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு கூகுள் மேப்பின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பைக்கில் செல்பவர்கள் முதல் காரில் செல்பவர்கள் வரை அனைவரும் முதலில் பயன்படுத்துவது கூகுள் மேப் தான். ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் கூகுள் மேப்பில் இப்படியொரு பயன்பாடு இருந்தால் கழுத்து வலியும் இருக்காது, அடைய வேண்டிய தூரத்தில் உரிய நேரத்தில் அடைந்துவிடலாம் என்பது போன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் Pothole Mode என்ற பயன்பாடு கண்டிப்பாக கூகுள் மேப்பில் இருக்க வேண்டும். இந்த பயன்பாடு சாலையில் செல்லும் போது எங்கெல்லாம் பள்ளம் மேடு அல்லது குண்டும் குழியும் இருக்கிறது என்பதை என்ற தகவல் முன் கூட்டியே கொடுக்கும். இந்த பயன்பாடு எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கும். இதைத் தான் அவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிவேதா பெத்துராஜின் இந்த பதிவிற்கு பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் கண்டிப்பாக சென்னைக்கு இந்த பயன்பாடு தேவை என்றும், முதலில் சென்னையில் தான் இந்த பயன்பாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த பயன்பாடு போன்று learnopencv என்ற இணையதள பக்கத்தில் YOLOv8 என்ற பயன்பாடு மூலமாக குண்டும் குழியுமான சாலையை கண்டறிவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
