நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் காதல் நஞ்சைக்கலந்தவர்.   ரிலீஸாகி ஆண்டுகள் சில ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே அழகே அடியே’ பாடல்தான் இன்றைக்கும் காதலர்கள் பலரின் ரிங் டோன்.

ஒருநாள் கூத்துக்குப் பிறகு பெரிய அளவில் பிஸியாகவிட்டாலும்  ஜெயம் ரவியுடன் ‘டி டிக் டிக்’, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, இதோ தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘திமிறு பிடிச்சவன்’ என்று தமிழ்சினிமாவில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் நிவேதா. 

ஆனால், இதுவரை கிளாமர் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டுக்கொண்டிருந்த நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சிகரமான படங்கள் சில வலைதளங்களில் வளையவருகின்றன. ஊர் உலகுக்கு உண்மையைச் சொல்லி ஆகவேண்டுமே என்ற உயரிய எண்ணத்தில், படங்களை நன்றாக உற்றுப்பார்த்ததில் அதில் ஃபோட்டோஷாப் போன்ற உள்குத்துகள் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை.

இந்த இன்ப விபத்து எப்படி நடந்தது என்று விளக்கி, மூர்ச்சை அடைந்துகிடக்கும் ரசிகர்களை தெளியவைப்பாரா நிவேதா...?