'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் அறிமுகமானவர் நம்ப மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். பிறந்தது மதுரையாக இருந்தாலும் வளர்ந்தது துபாயில் தான். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் தேடி வந்தது. இவருடைய நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் டிக் டிக் டிக். 

விண்வெளி சம்மந்தமான கதையம்சம் கொண்டு ஜெயம்ரவி தன்னுடைய மகனுடன் நடித்து முடித்துள்ள இந்த படத்தில் நிவேதா முக்கிய கதாப்பதிரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லையாம், பிரபல பாலிவுட் மாடல், ஹ்ரிடு என்பவராம். அச்சு அசலாக நிவேதா பெத்துராஜ் போலவே இருக்கும் இவரை பார்த்து பல ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.  

அந்த புகைப்படம் இதோ: