பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தாடி பாலாஜி, தன்னை பற்றி தினந்தோறும் தப்பு தப்பா பேசி வருவதாக அவரது மனைவி நித்யா குற்றம் சாட்டி உள்ளார்.
விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர், நடிகரும், தொகுப்பாளருமான தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் இவருடைய மனைவி நித்யாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது. ஆனால் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றாலும் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி நித்யாவை சமாதான படுத்துவதற்காக தாடி பாலாஜியும் கலந்து கொண்டார். ஆனால் முதலில் சமரசம் ஆவது போல், தெரிந்தாலும், பிறகு அதுவும் பிரச்சனையில் தான் முடிந்தது. எனவே இப்போது வரை இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தாடி பாலாஜி, தன்னை பற்றி தினந்தோறும் தப்பு தப்பா பேசி வருவதாக அவரது மனைவி நித்யா குற்றம் சாட்டி உள்ளார். இனியும் தன்னை பற்றி அவர் இழிவாக பேசினால், அவர் என்னையும் என் மகளையும் அசிங்க அசிங்கமாக திட்டிய ஆடியோவும், வீடியோவும் என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடுவேன் என கூறி உள்ளார்.
மேலும், மகளை பிரிந்து இருக்கிறேன் என அவர் நடித்துக் கொண்டிருப்பதாக நித்யா சாடி உள்ளார். தன்னை வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு அனுப்பினால் அவரை வச்சி செஞ்சிடுவேன் என்றும் நித்யா கூறியுள்ளார். தாடி பாலாஜியின் மகள் போஷிகா பேசுகையில், அப்பா நீங்க மீடியாவுக்காக மட்டும் அப்படி பண்ணாதீங்க. எது நல்லது எது கெட்டதுனு எனக்கு தெரியும். அந்த அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு என கூறியுள்ளார். இப்படி இவர்கள் இருவரும் பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
