nithiyanantha devotee actor ranjitha car accident
நடிகை ரஞ்சிதா சென்ற கார் விபத்து:
நடிகை ரஞ்சிதா சென்ற கார் விபத்துக்குள்ளான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ரஞ்சிதா குடும்பத்தை துறந்து நித்தியானந்தாவின் ஆன்மீக சிஷ்யையாக மாறி நித்தியானந்தா மடத்தில் சேவை செய்து வருகிறார். இவர் நேற்று பெங்களூரு அருகே ஆஞ்சேபாளையா அருகே சொகுசு காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற கார், எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தின் காரணம்:

இந்த விபத்துக்கு காரணம் ரஞ்சிதா சென்ற காரை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்ததாக அங்கே இருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை:

இந்த விபத்துக்குறித்து அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். காரில் இருந்த ரஞ்சிதா உட்பட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
ரஞ்சிதா:

நடிகை ரஞ்சிதா, தற்போது ஆன்மீகம் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறி ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தாலும். 80களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
