nithiya balaji family problem raise in biggboss family
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகை மும்தாஜ் ஏன் அழுகிறார்...? சென்ராயன் அப்படி என்ன செய்தார் என அனைவர் மனதிலும் ஒரு கேள்வி உள்ளதால் இன்றைய நிகழ்ச்சி கண்டிப்பாக விருவிருப்புடம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில்... 'சென்ராயன் நித்தியாவை அழைத்து தனிமையில் எவ்வளவு நாள் வாழ முடியும், கணவருடன் சேர்ந்து தான் இருக்கணும் என்பது போன்ற சில அறிவுரைகளை கூறுகிறார்.
இதற்கு, 'நித்யா நான் தனியா இருக்கிறேன் என யார் சொன்னது'. ஒவ்வொருத்தருக்கு ஒரு சுதந்திரம் இருக்கும், கண்ட்ரோல் செய்தால் யாருக்கும் பிடிக்காது. குறிப்பாக உங்க தங்கச்சியை மீடியாவுக்கு போய் இரண்டு நபர்களின் புகைப்படத்தை வைத்து, இவர்கள் இருவருக்கும் என்னுடன் தொடர்பு உள்ளது என சொன்னால் நீங்கள் ஒற்றுக்கொள்வீர்களா...? இது போல் எந்த கணவராவது செய்வாரா..? என நித்யா அவரின் பக்கம் உள்ள நியாயத்தை கூறுகிறார்.
பின் பாலாஜி பேசுவது காண்பிக்கப்படுகிறது, அதில் 'இந்த அவமானம் தனக்கு தேவை தான் என கூறுகிறார்'. இதனால் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரங்களில் பாலாஜி - நித்யா குடும்ப பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
