Nilavukku Enmel Ennadi Kobam : நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் அவருடைய ஐம்பதாவது திரைப்பட பணிகள் முடிந்துள்ள நிலையில், அவர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்பட பணிகளை அவர் தற்போது துவங்கியுள்ளார்.

பிரபல நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது உறவினர் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கவிருக்கும் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்திற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்த திரைப்படமாக இருக்குமோ என்கின்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியிலும் தனுஷின் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

என்ன நடந்தது?

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் திரைக்கதை வசனம் எழுத இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் தான் இப்பொழுது தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள உள்ள இந்த "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படம் என்று கூறப்படுகிறது. 

தனுஷின் சூப்பர் ஹிட் பாட்டு.. ஆனா அது நான் விக்ரமிற்கு போட்ட மெட்டு - ட்ராப்பான படம் குறித்து பேசிய GVP!

இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சில வருடங்களுக்கு முன்னதாக தனுஷ் திரைக்கதை எழுத அந்த படத்தை நான் இயக்கவிருந்தேன். ஆனால் அதன் பிறகு அந்த திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது தனுஷ் அவர்களே அந்த திரைப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி அந்த படத்தை இயக்கவிருக்கிறார் என்று கூறியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். 

Scroll to load tweet…

ஆனால் முன்னதாக இந்த திரைப்படத்திற்காக சௌந்தர்யாவுடன் இணைந்து தனுஷ் பணி செய்யக்கூடாது என்று கூறி தான் முதல் முதலில் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் இடையே சண்டை முண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அந்த படம் நின்று போன நிலையில் அந்த விவாதம் முற்றியே தற்பொழுது தனுஷ் அவர்களும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு செய்தி வளம்வருகின்றது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.