சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 
எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் 
போலீசாருக்கு எதிரான கருத்துகளைக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து, குன்னூரில் பதுங்கியிருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலானி மீண்டும் சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை நிலானி தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தபோது, அவருடைய காதலன் காந்தி லலித்குமார், திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக நிலானி போலீசில் புகார் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நிலானியின் காதலன், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். லலித்குமார் இறப்பதற்கு முன்பு, நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரது இறப்புக்கு சின்னத்திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் நடிக்க நிலானி வாய்ப்பு தேடிய போது, லலித்தின் நட்பு நிலானிக்கு கிடைத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்த போதிலும், நிலானி லலித்தின் பணத்திற்காக அவருடன் பழகி காதலாக பழகி பின் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார். லலித்திடம் பணம் தீர்த்த பின் காதலை முறித்து கொண்டதால், லலித் தற்கொலை முடிவை எடுத்ததாக அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் லலித் காந்தி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் நிலானியை கைது செய்யாமல் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தொடர் விசாரணைக்கு பயந்து பெற்ற குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு நிலானி தலைமறைவு ஆகியுள்ளதாகவும், இவருடைய குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலானியை போனில் பிடித்து குழந்தைகளை சமாதானம் செய்யலாம் என சிலர் முயற்சித்த நிலையில் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.