nikisha patel wish to do marriage with prabudeva
பாலிவுட்டில் தற்போது கோடி கட்டி பறக்கும் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள தயார் என நடிகை நிகிஷா படேல் தெரிவித்து உள்ளார்.
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல்.இவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா..?
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் தற்போது நடித்து வருகிறேன். இப்போதைக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன்.

தமிழ் படங்களில் நடிக்க, நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது கசப்பான உண்மைதான் என்றும்,மேலும் இது அனைத்து துறையிலும் இருக்கிறது..ஆனால் சினிமாத்துறை என்பதால் அது எளிதில் வெளியில் தெரிகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்

ஹீரோக்களில் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்பாக பழகுகிறோம்.

பிரபுதேவாவுடன் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவரை திருமணம் செய்துகொள்ளவே நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறி உள்ளார்.
ஏற்கனவே பிரபு தேவாவிற்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் இருக்கிறது மற்றும் நயன்தாரா முதற்கொண்டு பல சர்ச்சைகளை கடந்து வந்தவர்.
இந்நிலையில் திடீரென, நிகிஷா படேல் இது போன்று தெரிவித்து உள்ளதால் மேலும் சர்ச்சை கிளம்பி உள்ளது.
