தமிழில் டார்லிங், யாகாவராயினும் நாகாக்க, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிக்கிகல்ராணி.  இவருடைய மூத்த சகோதரி சஞ்சனா கல்ராணி, தற்போது தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக கன்னடத்தில் அறிமுகமானவர். தற்போது பல தெலுங்கு, மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.  ஆனால் இதுவரை தமிழ், திரையுலகின் பக்கம் வராமல் இருந்த இவர், நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுவர்ணா என்ற டிவி தொடரில் சஞ்சனாவின் நடிப்பை பார்த்து வியந்து, பாஸ்கர் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். சஞ்சனா குதிரை சவாரி பயிற்சி பெற்றவர், ஆனால் இவர் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகவில்லை.

இந்த படத்தில் அருண்விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் வெளிநாட்டில் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.  இதில் கதாநாயகியாக இறுதிசுற்று, படம் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். இந்த படத்தில் விளையாட்டு செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளராக அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விவேக் இயக்கி வருகிறார்.