'கபாலி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்ததன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறியவர் தன்ஷிகா. 

இந்த படத்தை தொடர்ந்து,  தன்ஷிகா தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும்  ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது 'யோகிடா' என்ற படத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை இயக்குனர் 'கௌதம் கிருஷ்ணா' என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது.  அப்போது நைட் கிளப்பில் நடிகை தன்ஷிகா ரவுடிகளுடன் சண்டை போடும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டது.

இந்த காட்சியில் தன்ஷிகா டூப் போடாமல் நடித்தார். அப்போது ரவுடி ஒருவர் தன்ஷிகா மீது பீர் பாட்டிலை தூக்கி எறியும் காட்சி படமாக்கப்பட்டது,  ஆனால் டைம்மிங் மிஸ் ஆகியதால்  எதிர்பாராதவிதமாக அந்த பாட்டில் சுவர் மீது பட்டு உடைந்து சிதறியது.

அப்போது...  தன்ஷிகா மீது சில கண்ணாடித் துண்டு பட்டது. ஒரு கண்ணாடி துண்டு அவர் கண்ணுக்கு கீழ் பலமாக கிழித்து விட்டது. இதனால் தன்ஷிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு  ரத்தம் கொட்டியது.  இவரை படக்குழுவினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.  கண்ணில் ஏற்பட்ட காயம் பலமாக இருப்பதால் தற்போது தன்ஷிகாவின்  முகம் வீங்கி இருப்பதாகவும் இதனால் ஓரிரு நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தன்ஷிகா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது