NidhhiAgerwal brandy ad : பணத்திற்காக பொறுப்பின்றி மதுபான விளம்பரங்களில் தமிழ் நடிககைகள் தோன்றுவதை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்தது வரும் நிலையில் நித்தி அகர்வால் பிராந்தி விளம்பரத்தில் நடித்துள்ளது பலரையும் கடுப்பேற்றியுள்ளது.

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு. 

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

 இதற்கிடையே பிரபல பிராந்தி நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ள நித்தி அகர்வால் அது தொடர்ப்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ; நிதிகேர்வால்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொண்டாட்டத்தை ஒரு கலையாக மாற்றியதை நினைவுபடுத்தும் வகையில், இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்தியான Morpheus ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது ஒரு அழகான கோப்பையுடன் வருகிறது, இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு சிப்பையும் சிறந்த முறையில் சுவைக்கலாம். என குறிப்பிட்டுள்ளார்.

பணத்திற்காக பொறுப்பின்றி மதுபான விளம்பரங்களில் தமிழ் நடிககைகள் தோன்றுவதை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்தது வரும் நிலையில் நித்தி அகர்வால் பிராந்தி விளம்பரத்தில் நடித்துள்ளது பலரையும் கடுப்பேற்றியுள்ளது.

View post on Instagram