கடந்த இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் NGK . கடந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் மே 31 ஆம் தேதி, மிக பிரமாண்டமாக 'NGK ' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வரவேற்பதற்காக, பெண் ரசிகர்களுக்கு மட்டும் பிரத்தேயேக காட்சியை ஏற்பாடு செய்துள்ளது திரையரங்கம் ஒன்று.

பொதுவாகவே, பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது, அந்த படத்தின் பிரதியாக காட்சி ரசிகர்களுக்கு வெளியிடப்படுவது வழக்கம்.  

அந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.  குறிப்பாக தமிழில் சூர்யாவிற்கு பெண் ரசிகர்கள் இருப்பதற்கு இணையாக மலையாளத்திலும் சூர்யாவிற்கு பெண் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

இதனால் கேரள மாநிலம் செங்கரம்குளம் பகுதியில் உள்ள 'மார்ஸ் சினிமாஸ்' என்ற திரையரங்கள் ரசிகர்களுக்கு மட்டும் சிறப்புக்காட்சி ஒன்றை பிரமாண்டமாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ரசிகைகள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர்.