செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் தொடர்பான சச்சரவுகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஏப்ரலில் ரிலீஸாகும் வகையில் எப்படியாவது படத்தை முடித்துத்தர செல்வா சம்மதித்திருப்பதாகவும் நம்பிக்கையான செய்திகள் நடமாடுகின்றன.

சுமார் 14 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சூர்யா செல்வராகவன் காம்பினேஷனின் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா படத்துக்கான சுறுசுறுப்புகள் எதுவுமின்றி தம்பி தனுஷ் படத்தை இயக்குவது போலவே மிக சாவகாசமாக இயக்கிவந்தார் செல்வா. இதனால் சூர்யா, தயாரிப்பாளர் தரப்புக்கும் செல்வராகவனுக்கும் மத்தியில் முட்டல்,மோதல் ஏற்பட்டது.

இத்தகவலைக் கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள் வலைதளங்களில் செல்வராகவனை வறுத்தெடுத்தனர். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் தாமதமாகிவிட்டது என்று மன்னிப்புக் கோரிய செல்வராகவன், மேலும் எத்தனை நாள் படப்பிடிப்புகள் தேவைப்படுகிறது என்று சொல்லாமல் இழுத்தடித்துக்கொண்டே வந்தார்.

 இறுதியில் புரடியூசர் கவுன்சிலில் பஞ்சாயத்து வைக்கலாமா என்று தயாரிப்பாளர் மற்றும் சூர்யா தரப்பு யோசித்திருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு தேதிகளைக் குறித்துக்கொடுத்த செல்வா, எப்படியும் ஏப்ரலில் படத்தைத் திரைக்குக் கொண்டுவர இரவு பகல் பாராமல் உழைக்கவிருப்பதாக உத்தரவாதம் அளித்து, பிரச்சினைகளுக்கு தற்காலிகமாக பேக் அப் சொல்லியிருக்கிறார்.

செல்வராகவன் படம்னா ரெண்டு ஹீரோயின்கள் இருக்கணுமே? யெஸ் சாய்பல்லவியும் ராகுல் ப்ரீத் சிங்கும் இருக்கிறார்கள்.