நடிகர் சூர்யா மற்றும் செல்வராகவன் முதல் முறையாக கைகோர்த்துள்ள, 'NGK ' திரைப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி, வெளியாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுவரை தமிழ் படம் வெளியாகாத தென்கொரியாவில் முதல் முறையாக வெளியாக உள்ளது.  மேலும் தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் சூர்யாவின் 'என்.ஜி.கே' பெற்றுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

இதனால் தென்கொரியாவில் வாழும் தமிழ்சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியோடு இப்படத்தை வரவேற்க உள்ளனர்.

இந்த படத்தில், முதல் முறையாக சூர்யாவுடன் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் இளவரசு , பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.