ராமர் கோயில் கட்டுவதற்கு கேஜிஎஃப் யாஷ் 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் கட்டுவதற்கு கேஜிஎஃப் யாஷ் 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டோலிவுட் நடிகர் யாஷ் ஒரே இரவில் ஒரு முன்னணி நட்சத்திரமாகியுள்ளார். அவர் எடுக்கும் ஒவ்வொரு அசைவையும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் பிந்தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் யாஷ் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 50 கோடி நன்கொடை அளித்ததாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகு... மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!

இந்த செய்தி வைரலானதை அடுத்து சிலர் அவரைப் பாராட்டியும், சிலர் விமர்சித்தும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சந்தோஷ் திரிபாதி என்ற ஃபேஸ்புக் பயனர் யாஷின் படத்தைப் பகிர்ந்து, தென் சூப்பர் ஸ்டார் நடிகர் யாஷ் குமார் ராம் மந்திரில் ராம்லாலாவைச் சந்தித்து, ராமர் கோயில் கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த செய்தி போலியானது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து வெளியான அறிக்கையில், நடிகர் இது போன்ற எதையும் அறிவிக்கவில்லை. இந்த செய்தி போலியானது.

இதையும் படிங்க: தளபதி விஜயுடன் விமானத்தில் விதவிதமாக செல்ஃபி... வரலட்சுமி சரத்குமார் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்..!

உண்மையில், பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் அத்தியாயம் 2 வெளியாவதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் யாஷ் திருப்பதிக்கு சென்ற போது எடுத்த படங்கள் தான் பரவி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் 2க்குப் பிறகு, யாஷின் அடுத்த திரைப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பிரபாஸ் டைட்டில் ரோலில் நடிக்கும் பிரசாந்த் நீல்ஸ் இயக்கும் சலார் படத்தில் அவர் ராக்கியாக ஒரு கேமியோ தோற்றத்தில் தோன்றுவார் என்ற ஊகங்கள் பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.