பர்மா படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடிக்கும் படம் எண் 4. இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் செய்திவாசிப்பாளரான சரண்யா.

வடசென்னையின் காசிமேடு பகுதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் படம் தான் எண் 4. இந்த படத்தில் நடிக்க முதலில் சின்னத்திரை பிரபலமான வாணி பஜனை அணுகியுள்ளனர். ஆனால் படக்குழு கேட்ட தேதியில் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாததால், அதற்கு அடுத்தபடியாக செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில படங்களில் நடித்தவருமான சரண்யாவை கதாநாயகியாக கமிட் செய்து உள்ளனர்.

இவர் இதற்கு முன்னதாக சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் உள்ளிட்ட பலவற்றில் நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென தனி இடம் பிடித்தவர். இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் அபிஷேக், வடிவுக்கரசி அனுபமா குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.