Kanmani Lover: சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும்,  சீரியல் நாயகன் நவீன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம்.  இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும், சீரியல் நாயகன் நவீன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம். இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா பிரபலங்களை போன்று, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், செய்திவாசிப்பாளர்கள் சமீப காலமாக ட்ரெண்ட் அடித்து வருகின்ற்னர். முன்னதாக சன் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா, பிரபலம் அடைந்து தனக்கென ரசிகர்களை பெற்றார். திருமணத்திற்கு பிறகு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.தற்போது அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

அந்த வரிசையில், சன் டிவி செய்தி வாசிப்பாளராக களம் இறங்கிய கண்மணி, தமிழில் ஜெயா நியூஸ், நியூஸ் 18 உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளதால் இவரது செய்திகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும், அவ்வப்போது புகைப்படம் வெளியிடுவார்.

இதையும் படிக்க...Valimai Box Office: 200 கோடியை தாண்டிய அஜித்தின் வலிமை...வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்! குஷியில் ரசிகர்கள்!

இந்த நிலையில், நேற்று சீரியல் நடிகர் நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும், சிலர் இவர்க்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதன்முதலாக மலையாளத்தில் மணிரத்னம், என்ற படம் மூலம் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...Vijay fans: பீஸ்ட் பாடலுக்கு கேரளாவில் இருக்கும்...விஜய் ரசிகர்கள் வெறித்தமான கொண்டாட்டம்... வைரல் வீடியோ..!

மேலும் படிக்க...THALAPATHY66: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ஓ சாமி பாடல்'' புகழ் ராஷ்மிகா.! படு குஷியில் ரசிகர்கள்..!