சிம்பு ஜோடியாக ''போடா போடி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தைப்பெற்றார். இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார். 

விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. தொடக்கத்தில் வாய் திறக்காத வரலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விளக்கம் அளித்தார்.

அதில், விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ சொல்வதெல்லாம் பொய்.

விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்பு விஷால் அப்பா பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் இவருக்கும் ஆந்திர பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆன தகவலை அறிவித்துள்ளார். இதனையடுத்து வரலட்சுமியை விஷால் ஏமாற்றிவிட்டாரா? என சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டதால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். 

Scroll to load tweet…

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும் என பதிவிட்டு விஷால் உடனான காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.