தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ரசிகர் மனோபாவத்துக்கு மாறி, இன்னும் ஐந்தே நாட்கள்...நாலே நாட்கள்..இரண்டே நாட்கள்’ என்று ட்ரெயிலர் ரிலீஸ் தேதிக்கு சூடேற்றிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். 

அத்தோடு நின்றால் போதுமா? படம் பற்றிய சில பரபரப்பான தகவல்களும் பரவவேண்டுமே. தற்போது அக்‌ஷய் குமார் நடித்துவரும் வில்லன் வேடத்தில் நடிக்க முதன்முதலாக அணுகப்பட்டவர் ‘ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டாலோனாம். அவர் கேட்ட சம்பளம் ஹீரோ ரஜினிக்கு அளிக்கப்பட்டதை விட இந்தியப்பணத்தில் மூன்று மடங்காக இருந்ததால், சற்றும் யோசிக்ககிவிட்டார்கள். 

ஷங்கரின் அடுத்த குசும்புதான் செய்தியே. அடுத்து ஷங்கர் அணுகியது கமலை. கமலுக்காக வில்லன் வேடத்தில் சில மாற்றங்கள் செய்யவும் தயாராக இருந்திருக்கிறார். சம்பளமும் ரஜினிக்கு இணையான அதே தொகையைத் தர தயாரிப்பு நிறுவனமும் தயார். ஆனால் சற்றும் யோசிக்காமல் நோ சொன்ன கமல். யாரையாவது வச்சி அந்த வில்லன் கேரக்டரை முடிச்சிட்டு சீக்கிரம் ஹீரோ கிட்ட வாங்க. அதாவது ‘இந்தியன்2’வை எடுக்கலாம் வாங்க’ என்று அழைப்பு விடுத்துவிட்டு ‘2.0’ அழைப்பை நிராகரித்தாராம். 

ரஜினி,கமல் இருவருமே தனித்தனியாக கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் ஒருவேளை பெரிய சம்பளத்துக்கு ஆசைப்பட்டு கமல் வில்லன் வேடத்துக்கு சம்மதித்திருந்தால் பெரும் காமெடியனாக மாறியிருப்பார். கிரேட் எஸ்கேப் கமல்.