new party ...actor kamal will announce on november 7th

வரும் நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நடிகர் கமலஹாசன், ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் தொடர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கமலஹாசனுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

கமல் அரசியலுக்கு வந்த பிறகு இருபோன்ற கருத்துக்களை கூறட்டும் என அமைச்சர்களும், பாஜக தமிழக தலைவர்களும் கூறிவந்தனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கு வகையில், தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், அரசியல் குறித்து கருத்து சொல்வதற்கு தனக்கு உரிமை உள்ளத என்றும் தெரிவித்திருந்தார். மேலும் விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தனது பிறந்த நாளான நவம்பர் 7ஆம்அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஆனந்த விகடன் இதழில் கமலஹாசன் எழுதி வரும் தொடரில் வரும் நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும், நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் என்றும் தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

. இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம் என அந்த தொடரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு தனிக்கட்சி துவங்குவது தொடர்பான முடிவாக இருக்கலாம் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.