தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே, வெற்றி பெற்ற படங்களுக்கு மட்டும் இன்றி, தோல்வியடைந்த படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெற்றி பெற்ற படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளது.

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணுவிஷால், கதாநாயகனாகவும் மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்து வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'இன்று நேற்று நாளை 2' படத்தை இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சிவி குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளது. விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.