Asianet News TamilAsianet News Tamil

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’... செம்பி பட வசனம் நீக்கம் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

செம்பி படத்தின் டிரைலர் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த அரசியல்வாதிக்கு எதிரான வசனம் படத்தில் நீக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Netizens troll Sembi movie political dialogue removed
Author
First Published Jan 3, 2023, 11:38 AM IST

மைனா, கும்கி, கயல் என பல யதார்த்தமான படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரபு சாலமன். இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த தொடரி, காடன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு அவர் இயக்கிய படம் தான் செம்பி.

இப்படத்தில் கோவை சரளா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி அஸ்வின், தம்பி ராமையா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேருந்து பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கோவை சரளா பழங்குடியின பெண்ணாக நடித்து இருந்தார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பேமஸ் ஆன கோவை சரளா, தனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

Netizens troll Sembi movie political dialogue removed

அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்து அசத்தி உள்ள கோவை சரளாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. செம்பி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... ரூ.3000 கோடியா..! அதகளமான அறிவிப்பை வெளியிட்ட கேஜிஎப் பட நிறுவனம்

செம்பி படத்தின் டிரைலர் வெளியானபோது அதன் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கும், அதில் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஓட்டு போட்டால் உனது பேத்தியை டாக்டர் ஆக்கி விடுவேன் என கூறுவார். இதையடுத்து கோவை சரளாவிடம் அவரது பேத்தி, பாட்டி நீ அந்த மாமாவுக்கே ஓட்டு போட்ரு அவர் என்னைய டாக்டர் ஆக்கிடுவாறு என கூறுவாள். இதற்கு பதிலளிக்கும் கோவை சரளா, எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் என கூறுவார்.

டிரைலரில் இந்த வசனம் இடம்பெற்றிருந்தபோதே இது படத்தில் வருமா என்கிற சந்தேகம் இருந்தது. நெடிசன்கள் கணித்தபடியே இந்த வசனத்தை படத்தில் மியூட் செய்துவிட்டனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளதன் காரணமாக தான் இந்த வசனத்தை மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... டேட்டிங் சென்றபோது... பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த தமன்னா - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

Follow Us:
Download App:
  • android
  • ios