மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள "தலைவி" படத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் "தலைவி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாற நினைத்த கங்கனா, அதற்காக அமெரிக்கா வரை சென்று டெஸ்ட் லுக் எடுத்தார். அந்த டெஸ்ட் லுக்கை வைத்து "தலைவி" படத்தில் ஜெயலலிதாவாக நடித்தார் கங்கனா. அங்கு அப்படி என்னதான் டெஸ்ட் வைத்தார்களோ தெரியவில்லை, ஆனால் ஜெயலலிதாவாக மாறுவதில் கங்கனா பெயில் ஆகிவிட்டார் என்றே கூறவேண்டும்.

 

ஏனென்றால் போஸ்டரில் ஜெயலலிதா மாதிரியும் இல்லாமல், கங்கனா மாதிரியும் இல்லாமல் புது மாதிரி தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.  டீசர் வீடியோவில் நடிகையாக தோன்றும் ஜெயலலிதாவின் பாவனைகளும், கங்கனாவின் பாவனைகளும் வேறு, வேறாக உள்ளன. இதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிலர் ஜெயலலிதாவை காட்டச் சொன்னால், என்ன ஜெ.தீபா ஜெராக்ஸை கொண்டு வந்துட்டிங்க என மரண பங்கம் செய்துள்ளனர். கங்கனா ரனாவத் கெட்டப்பையும், ஜெயலலிதாவின் ஒரிஜினல் புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து ட்விட்டரில் நெகட்டிவ் கமெண்ட்கள் தீயாக பரவிவருகிறது. சில நெட்டிசன்கள் ஒருபடி மேலே போய் கங்கனாவின் கெட்டப்பை, உருளைக்கிழக்குடன் ஒப்பிடு செய்துள்ளனர். இது கண்டிப்பா ஜெயலலிதா இல்லவே, இல்லை என தொண்டர்களும், ரசிகர்களும் கொதித்தெழுந்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.