இந்தியன் தாத்தா ஸ்டைல்ல சொல்லாம; இப்படி சொல்லிட்டாரே- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கமலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியதால் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அச்சம்பவம் குறித்து கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி தான் இன்று தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அங்கு விஷச் சாராயம் அருந்தியதில் 39 பேரி பலியாகி உள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அரசின் அலட்சியப்போக்கே காரணம் என நடிகர் விஜய், இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் குற்றம்சாட்டினர். மறுபுறம் கடந்த ஆட்சியின்போது சமூக பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல்கொடுத்துவந்த கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் தற்போது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விஜய் தான் விதிவிலக்கு; தமிழ் திரையுலகம் யாரை கண்டு அஞ்சுகிறது? ஜெயக்குமார் விளாசல்
அதில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது” என பதிவிட்டு இருந்தார்.
கமல் லேட்டாக போட்ட இந்த ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில் மேலிடம் இப்போதுதான் பேச சொன்னார்களா....முன்னாடியே பேசுனா..எம்பி சீட் இல்லைனு சொல்லிட்டாங்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொரு பதிவில் இந்த அரசுக்கு எதிராக ஒரு சொல் கூட இல்லயே..? கூட்டணி வச்சதுக்கு அப்புறம் அப்படியே மாறிட்டியே குமாரு என கலாய்த்து பதிவிட்டுள்ளனர். இப்படி கமலை கலாய்ந்து ஏராளமான கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Pa Ranjith : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்... திமுக அரசை லெப்ட் ரைட் வெளுத்து வாங்கிய பா.இரஞ்சித்