ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. லைகா நிறுவனம் "சும்மா கிழி" பாடலை யூ-டியூப்பில் வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே 2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். தற்போது பாடலை வெளியிட்டு 19 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் "சும்மா கிழி" பாடலின் இசை பிரபல ஐயப்பன் பாடல் ஒன்றின் காப்பி என அனிரூத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். 

இதையும் படிங்க: ஆரம்பமானது ரஜினியின் "தர்பார்"... ஓவர் நைட்டில் யூ-டியூப்பை அலறவிட்ட சூப்பர் ஸ்டார் ... மரண மாஸ் காட்டும் "சும்மா கிழி"...!

நேற்று மாலை 5 மணிக்கு வெளியான சும்மா கிழி பாடல் எஸ்.பி.பி.யின் சிம்ம குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் விவேக்கின் வரிகளும், எஸ்.பி.பி.யின் குரலும் ரசிகர்ளை மயங்கச் செய்தது. அதனால் தான் "சும்மா கிழி" பாடலும் யூ-டியூப்பில் வெளியான சிறிது நேரத்திலேயே ட்ரெண்டிங்கில் இந்தியா அளவில் முதலிடம் பிடித்தது. ரஜினி ரசிகர்கள் என்ன, சூப்பர் ஸ்டார் பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு மறந்து போற ஆளுங்களா?, திரும்ப, திரும்ப பாட்டை கேட்ட போதுதான் அனிரூத் பண்ண பலே காரியம் தெரியவந்திருக்கு. 

 

"பிகில்" படத்தில் விஜய்யைத் தான் அட்லீ வச்சி செஞ்சிட்டாருன்னு பார்த்தா, சூப்பர் ஸ்டார அவரோட இன்ட்ரோ சாங்கிலேயே வச்சி செஞ்சியிருக்கார் அனிரூத். ஸ்ரீஹரி பாடிய "கட்டோடு கட்டுமுடி" என தொடங்கும் ஐயப்பன் பாடலை அச்சு பிசகாமல் காப்பியடித்த அனிரூத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கியுள்ளார் என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ள நெட்டிசன்கள், அனிரூத்தை மரண பங்கம் செய்து வருகின்றனர்.

இதற்கான வீடியோ ஆதாரங்கள் ஒருபக்கம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சமயத்தில், எஸ்.பி.பி. பாடிய பழைய பாடலை காப்பியடிச்சி இருக்கிறதாகவும் அனிரூத்தை கலாய்ச்சிட்டு இருக்காங்க நெட்டிசன்கள். பிரசாந்த் நடிச்ச "வைகாசி பொறந்தாச்சு" படத்தில் மிகவும் ஹிட்டானது "தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்தால் தவிக்குது" பாடல். இந்த பாடலையும் காப்பியடிச்சியிருக்குறதா சில ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.  

 

என்னதான் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டாருன்னு அனிரூத்தை நெட்டிசன்கள் வளைச்சி, வளைச்சி  வச்சி செஞ்சாலும், சூப்பர் ஸ்டார் பாடல் என்பதால் யூ-டியூப் ட்ரெண்டிங்கில் "சும்மா கிழி" பாடல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. "சும்மா கிழி" பாடல் லிரிக் வீடியோ முடியும் போது, சும்மா கிழிச்சிட்ட கண்ணான்னு அனிரூத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் சொல்வார். இப்போ அந்த டைலாக் அப்படியே உல்டாவா மாறினதா ரஜினி ரசிகர்கள் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. 

சும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! வீடியோ