பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி கடந்த 2003ம் ஆண்டு தமிழில் வெளியான "உன்னைச் சரணடைந்தேன்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் தமிழில் எடுக்கும் சில படங்களை, தெலுங்கு மொழியில் ரீமேக் செய்து இயக்கி வந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு "ஜென்டா பாய் கபிராஜ்" என்ற தெலுங்கு திரைப்படத்தை நேரடியாக அவர் அந்த மொழியில் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழ் மொழியில் இயக்கிய வினோதய சித்தம்" என்ற தமிழ் படத்தை, தற்பொழுது தெலுங்கில், பிரபல நடிகர் பவன் கல்யாணை வைத்து ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்து தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

இயக்குனருக்கு அஜித் போட்ட கண்டிஷன்! விடாமுயற்சி படத்தில் ஹீரோயின் மாற்றம்... திரிஷாவுக்கு பதில் இவரா? 

இந்த திரைப்படம் இன்று தெலுங்கு மொழியில் வெளியாகி உள்ளது, இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் நடித்துள்ள நாயகி ஊர்வசி போட்ட ஒரு ட்வீட் தற்பொழுது ட்விட்டர் உலகை மட்டும் அல்லாமல், தெலுங்கு சினிமா உலகத்தையும், ஆந்திர அரசியல் உலகையும் மிகப்பெரிய பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது என்று தான் கூறவேண்டும். 

Scroll to load tweet…

அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு பதிவில் "மதிப்பிற்குரிய ஆந்திராவின் முதல்வர் பவன் கல்யாண் அவர்களுடன், ப்ரோ திரைப்படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் சந்தோஷத்தை அளிக்கின்றது" என்று கூறி அனைவரையும் தடுக்கிட வைத்துள்ளார். 

பவன் கல்யாண் ஒரு அரசியல்வாதி என்றுபொழுதும், அவரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் என்று அவர் அழைத்தது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டர் பக்கத்தில் பலர் அவரை வன்மையாக கண்டித்து வரும் நிலையிலும், சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக அவர் போட்ட அந்த டீவீட்டை அவர் இன்னும் டெலிட் செய்யவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!