Asianet News TamilAsianet News Tamil

“ஒரு பிட்டு படத்துக்கு போய் இவ்வளவு ஆதரவு தர்ற”... பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவு என இரண்டாம் குத்து படத்தை அனைவரும் கழுவி ஊற்றி வரும் சமயத்தில் சாம்ஸ் இந்த நீண்ட பதிவு நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. 

Netizens slams Comedy actor Chaams for supporting Irandam kuthu adult movie
Author
Chennai, First Published Oct 9, 2020, 7:24 PM IST


தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா என காண்போர் வெட்கி கூசும் வகையில் இரண்டாம் குத்து என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயுள்ளனர். இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால்  “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Netizens slams Comedy actor Chaams for supporting Irandam kuthu adult movie

இந்நிலையில் அந்த படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சாம்ஸ் வரித்துக் கட்டிக்கொண்டு சோசியல் மீடியாவில் வக்காலத்து வாங்க நெட்டிசன்கள் கண்டபடி தீட்டி தீர்த்து வருகின்றனர். சாம்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு ஆதரவாக மிகப்பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டாம் குத்து" படத்திற்கு   "கலாச்சாரம் கெட்டு விட்டது" "கண் கூசுகிறது" என்று பலதரப்பட்ட விமர்சனங்கள்..அது சார்ந்த என்னுடைய சில சந்தேகங்கள்... குழப்பங்கள்...

தியேட்டர்
------------------
◾பிட்டுப்பட தியேட்டர்கள் நம் ஊரில் எதற்காக இருக்கிறது ? கலையை கலாச்சாரத்தை வளர்க்கவா அல்லது செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்கவா ?
◾ எனக்கு தெரிந்து அங்கே ஆண்கள் மட்டும்தான் படம் பார்க்க வருகிறார்கள்... அதை ஆண்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொண்டால் போதுமா ? வீட்ல போய் சொல்லி கொடுப்பார்களோ ?
◾ அந்த மாதிரி படங்களை பார்த்து மனம் சபலப்பட்டு தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று நினைத்தால் அதை எல்லாம் ஏன் இத்தனை நாட்கள் விட்டு வச்சிருக்கோம் ?
◾ நம் கலாச்சாரத்தை கெடுத்து இருக்கும் ஏரியாவிற்கு கலங்கத்தை ஏற்படுத்தி பெண்கள் அந்தப்பக்கம் செல்வதற்கே தயங்கும் அந்தத் தியேட்டர்களை எதிர்த்து ஏன் யாருமே போராடவில்லை ?
◾இளமைக்காலத்தில் அதையெல்லாம் பார்த்து ரசித்தவர்கள் ( நான் உட்பட ) இன்று குரல் கொடுத்தால்...  ஒரு வேளை வருந்தி திருந்தி விட்டோமோ ?
தொலைக்காட்சி
-------------------------------
◾ பெரியோர் முதல் சிறியோர் வரை இருக்கும் வீட்டுக் கூடத்திற்குள் இருக்கும் டிவி பெட்டிக்குள் சென்சார் இல்லாமல் கண்ட கருமமும்  வருகிறதே. புலம்புகிறார்களே தவிர அதை தடுக்கவோ தட்டிக் கேட்கவோ இதுவரை யாருமே வரவில்லை  ? ஓ.. அதெல்லாம் பெரிய இடம்
முடியாது என்று விட்டு விட்டார்களோ ?
இணையதளம் 
----------------------------
◾ டிவியை விட பல மடங்கு நெட் மூலமாக கம்ப்யூட்டரிலும் செல்லிலும் அநியாயத்திற்கு நம்மை கேட்காமலேயே சென்சார் செய்யப் படாஒமல் படு பயங்கரமாக வருகிறதே அது தவறாக தெரியவில்லையா ? அதற்காக யாரேனும் பொங்கி இருக்கிறார்களா ? அது இன்னும் மிகப்பெரிய இடம் என்று கண்ணை மூடிக்கொண்டு போகிறார்களோ ?
சினிமா 
---------------
◾ பாகவதர் காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை படங்களில் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டிய விஷயங்களில் அளவு  (புடவை to ஸ்விம் சூட்) மாறுபட்டுக் கொண்டே வருகிறதே 
இதில் எது சரியான அளவு ?
◾குடிப்பதை போல காட்சியை படத்தில் வைத்து "குடி குடியை கெடுக்கும்" என சப்-டைட்டில் போடுவது போல  ஆபாச காட்சியை வைத்து விட்டு  "மன நலத்தை கெடுக்கும்" என்று சப்டைட்டில் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ? 
◾ 'யு' சர்டிபிகேட் வாங்கிய படத்தில்  சில சமயம் 'ஏ' சர்டிபிகேட் அளவிற்கு சில காட்சிகள் வந்து நெளிய வைக்கிறதே அது எப்படி ? 
◾A சர்டிபிகேட் படங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் யாரையாவது பாதிக்கிறது  என்பதால் பேசாமல் இனிமேல் U சர்டிபிகேட் படங்கள் மட்டுமே தயாரித்தால் என்ன ? அந்த U விற்கு அளவு என்ன ?
பொதுவான சில சந்தேகங்கள்
-----------------------------------------------------
◾ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களில் வருகின்ற ஆபாச காட்சிகளை பார்க்கவும் ரசிக்கவும் செய்யும்போது கெடாத கலாச்சாரம்  பாதிக்காத நம் மனம் நம்மூர் காரன் செய்தால் கெட்டுவிடுமா ? 
◾நம்ம ஊர் கலாச்சாரத்தை காப்பாற்றும் பல உத்தமர்கள்  தாய்லாந்து  சென்று வந்ததை குறிப்பாக பட்டாயா சென்று அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு வந்ததை ரகசியமாக பெருமை பேசிக் கொள்வார்கள் தானே ?
◾ஒருவர் தயாரிக்கிறார் பலர் நடிக்கிறார்கள் அரசாங்கம் நியமித்திருக்கிற சென்சார் போர்டு அதிகாரிகள் முறையான சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள் பல தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். பலர் பார்க்க தயாராக இருக்கிறார்கள்.  எல்லோரையும் விட்டுவிட்டு இயக்குனரை மட்டும் காய்ச்சுவது ஏனோ ? 
🔴
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றால் ... யார் செய்தாலும் குற்றம் தானே ?
யானை அளவு விஷயம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எலி அளவை பிடித்து தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்...
அதுதான் புரியவில்லை ?
நிறுத்தினால் எல்லாவற்றையும் நிறுத்தவோம்...  

தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவு என இரண்டாம் குத்து படத்தை அனைவரும் கழுவி ஊற்றி வரும் சமயத்தில் சாம்ஸ் இந்த நீண்ட பதிவு நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. அதனால் உங்கள் குடும்பத்தோடு போய் படத்தை பார்த்துவிட்டு அதற்கு பிறகு இப்படி எழுதுங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், ஒரு பிட்டு படத்திற்கு ஆதரவு கொடுக்கும் போதே நீ எப்படிப்பட்ட ஆள் என்பது தெரிந்துவிட்டது என்றும் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios